Ad Widget

கிரிக்கட் மைதானத்தில் ஆடைகள் கழற்றிய சம்பவம்

இலங்கை மற்றும் சிம்பாப்பே அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற தீர்மாணமிக்க இறுதிப்போட்டியில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்களின் ஆடைகள் கழற்றிய சம்பவம் சூரியவெவ கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.

நாளொன்றுக்கு 1000 ரூபாய் என்றடிப்படையில் ஏறக்குறைய 100 ஊழியர்கள் நியமிக்கப்பட்டதாகவும் அவர்களின் ஆடைகள் கழற்றப்பட்டதன் பின்னரே சம்பளத்தொகை வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்காலிக ஊழியர்களுக்கு நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட காற்சட்டைகளில் இலங்கை கிரிக்கெட் அணியின் இலட்சினை பொறிக்கப்பட்டிருந்ததாகவும் அதனால் அக்காற்சட்டையை மீளப்பெற்றுக்கொண்டதன் பின்னரே சம்பளப்பணத்தை வழங்கியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஊழியரொருவர் “எதுவும் தெரியாது யாரும் சொல்லவும் இல்லை வேறு உடை அணிந்து வாருங்கள் கழற்றிய பின் என்ன செய்வது” என கருத்து வெளியிட்டார்.

Related Posts