தெற்கில் இடம்பெற்ற வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வடக்கு மக்களிடத்தில் சேகரிக்கப்பட்டுள்ள உலர் உணவு உள்ளிட்ட பல பொருட்கள் இன்று தெற்கிற்கு எடுத்துவரப்படவுள்ளது.
வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயின் அறிவுறுத்தலுக்கு அமைவாக அரசாங்கத் திணைக்களங்களின் பூரண ஒத்துழைப்புடன் வடக்கில் சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்களே இன்று எடுத்துவரப்படவுள்ளன.
இந்த பொருட்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் சேகரிக்கப்பட்டுள்ளன. பொருட்கள் களுத்துறை மாவட்ட செயலாளர் யூ.சீ.டி ஜயலாலலிடத்தில் வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயினால் வழங்கி வைக்கப்படவுள்ளன. நாளைய தினம் காலை 9 மணிக்கு மேற்படி நிகழ்வு இடம்பெறவுள்ளது.
நாட்டு மக்கள் குழுக்கள் மத்தியில் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதற்கு சரியான தருணமே தற்போது உருவாகியுள்ளது. அதனால் தெற்கு மக்களும் நல்லிணக்கத்தினை உண்டுபண்ண சரியான முறையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.