யாழ் வைத்தியசாலை தாதி உத்தியோகத்தர்கள் அடையாள வேலைநிறுத்தம்

யாழ் போதனா வைத்தியசாலை அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கத்தினர் இன்று ஒருமணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

10 வருடமாக உள்ள பதவி உயர்வை 6 வருடமாக மாற்றுதல், தாதி பட்டதாரிகளுக்கு சுகாதார அமைச்சின் நிர்வாக பதவிகளை வழங்குதல், அமைச்சினால் அனுமதிக்கப்பட்ட மேலதிக கொடுப்பனவுகளை வழங்குதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நண்பகல் 12 மணி தொடக்கம் 1 மணிவரை தமது அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

எம்முடைய கோரிக்கைகளுக்கு உரிய அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை எனில் ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Related Posts