யாழ்ப்பாண மாவட்டம் கோப்பாயில் உள்ள கள்ளுத் தவறணைக்கு முன்னால் நேற்றையதினம் பட்டப் பகலில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் 8பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,
நேற்றையதினம் கோப்பாய் கள்ளுத் தவறணைக்கு 5 உந்துருளிகளில் வந்த 9பேர் கொண்ட குழுவினர் அவ்விடத்தில் நின்றவர்கள் மீது கொடூரமாகத் தாக்கியுள்ளது.
இதனால் அவ்விடத்தில் நின்ற 8பேர் காயமடைந்துள்ளதுடன் 2பேர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இதனையடுத்து, காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.