இன்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த யாழ்தேவியில் மோதுண்டு இராணுவச் சிப்பாய் ஒருவர் பலியாகியுள்ளார். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று காலை அரியாலை இராணுவமுகாமுக்கு வாகனத்தில் சென்றுகொண்டிருந்த குறித்த இராணுவத்தினர் புகையிரதக் கடவையில் உள்ள சிக்னலைக் கவனிக்காது பாதையைக் கடக்க முற்பட்டபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் ஒருவர் அதேNயிடத்தில் பலியாகியுள்ளதுடன், இன்னொரு இராணுவச் சிப்பாய் படுகாயங்களுடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணையை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
