இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வடபகுதி கடற்றொழிலாளர் குழுவொன்று 25ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளது.
இந்தக் குழுவில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த 12 பிரதிநிதிகள் இடம்பெறவுள்ளதாக கடந்நொழில் மற்றும் கடல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
‘குளத்துடன் கிராமம்’ என்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி சாந்திபுரம் கடற்றொழில் கிராமத்தை அபிவிருத்தி செய்யும் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை கூறினார்.
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்துவது விஜயத்தின் நோக்கமாகும். இறுதித் தீர்வை எட்டுவது பற்றி இந்திய அரசாங்கத்துடன் இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்தப்படுமென்றும் அமைச்சர் கூறினார்.