டெங்கு நுளம்புக்கு இடம் கொடுக்காதீர்கள்

டெங்கு நுளம்பு பரவும் விதத்தில் சூழலை வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களின் சுற்றுச்சூழலிலும் பொது இடங்களிலும் டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, தனியார் மற்றும் அரச நிறுவனங்களில், டெங்கு நுளம்பு பரவும் இடங்களைத் துப்பரவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த இடங்களில், நுளம்பு குடம்பிகள் காணப்பட்டால், அவற்றை உடனடியாக அகற்றவேண்டும் எனவும் அவ்வாறு அகற்றப்படாது விடின் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தனிநபருக்கு காய்ச்சல் ஏற்படுமாயின், எந்தவொரு காலதாமதமும் இன்றி, உடனடியாக வைத்தியரை நாடுமாறும் அதற்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts