ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் அவசரமாக கொழும்புக்கு திரும்பியது

முல்லைத்தீவு கேப்பாப்புலவு நோக்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்துக்கொண்டிருந்த உலங்கு வானூர்த்தி அவசரமாக மீண்டும் கொழும்புக்கு திரும்பியுள்ளது.

கேப்பாப்புலவுக்கு இன்றைய தினம் விஜயம் செய்து முதற்கட்டமாக 53 குடும்பங்களுக்குரிய 243 ஏக்கர் காணியை ஜனாதிபதி விடுவிக்க உத்தேசித்திருந்தார்.

இதற்காக கொழும்பிலிருந்து விசேட வானூர்த்தி மூலம் அவர் முல்லைத்தீவிற்கான விஜயத்தை இன்று காலை ஆரம்பித்தார்.

எனினும் முல்லைத்தீவில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக உலங்கு வானூர்த்தியை தரையிறக்கம் செய்யமுடியாமற்போனதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் காணி விடுவிப்பு திட்டம் மறுஅறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

Related Posts