பருத்தித்துறையில் மோட்டார் குண்டுகள் மீட்பு

பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பன் பகுதியில் இருந்து 81 ரக மோட்டார் குண்டுகள் இரண்டு இன்று (19) மீட்கப்பட்டதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பன் கிழக்கு பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து இந்த மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, அங்கு சென்ற பொலிஸார் குறித்த குண்டுகளை மீட்டுள்ளனர்.

அத்துடன் நீதிமன்ற உத்தரவு பெற்று விஷேட அதிரடிப் படையினரின் உதவியுடன் குண்டுகளை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

Related Posts