யாழில் ஒப்பந்தக்காரர்களை நியமிப்பது சவாலாக உள்ளது!

யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 50 மில்லியன் ரூபா பெறுமதியான வேலைத்திட்டங்களுக்கான ஒப்பந்தக்காரர்களை நியமிப்பது, பெரும் சவாலாக உள்ளதென யாழ். அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வேலைத்திட்டங்களில் குறிப்பாக வறட்சி மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய திட்டங்களை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதென குறிப்பிட்ட யாழ்.அரச அதிபர், குளங்களின் புனரமைப்பும் அவசியமானதென குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் மிகச் சரியான திட்டங்களை முன்வைக்க வேண்டியுள்ளதென்றும் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் யாழ். அரச அதிபர் கேட்டுக்கொண்டார்.

Related Posts