வடக்குக், கிழக்கில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மழைபெய்யக்கூடும்!

எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இருப்பினும், இந்த மழை வீழ்ச்சி நாட்டின் பல பாகங்களிலும் தற்பொழுது நிலவும் வறட்சி நிலைமைக்கு ஈடுகொடுக்க போதியதாக இருக்காது எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் அனுஷா வர்ணசூரிய இதனை தெரிவித்துள்ளார்.

காற்று வீசும் திசையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக குறித்த மழைவீழ்ச்சியானது ஒரு சில நாட்களுக்கு நீடிக்குமெனவும் தெரிவித்த அவர், குறிப்பாக வடக்குக், கிழக்கு மாகாணங்களிலேயே இந்த மழைவீழ்ச்சி காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இந்த வறட்சியான காலநிலை தொடர்ந்தும் காணப்படலாம் எனவும், இதன்போது பனி மூட்டம் காணப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts