எம்.ஜீ. ஆரின் 100 ஆவது பிறந்த தின நிகழ்வுகள் கல்வியங்காட்டில்

யாழ்ப்பாணம் எம். ஜீ. ஆர் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் எம்.ஜீ.ஆரின் 100 ஆவது பிறந்த தின நிகழ்வுகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் கல்வியங்காட்டுச் சந்தியில் அமைந்துள்ள எம்.ஜீ.ஆர் சிலையருகே நடைபெறவுள்ளது.

ஈழத்து எம். ஜீ. ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்திய உயர் ஸ்தானிகர் ஆ.நடராஜன், சிறப்பு விருந்தினராக இந்திய உதவி உயர்ஸ்தானிகரக ஆலோசகர் ஆர் செல்வம், வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.என்.சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

எம். ஜீ. ஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு 100 பேருக்கு புத்தாடைகளும், அன்பளிப்புகளும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts