காக்கைதீவில் உணவுக்கழிவு கொட்டியவர்கள் கைது!

உணவுக் கழிவுகளை ஏற்றிவந்து திருட்டுத் தனமாக காக்கைதீவுப் பகுதியில் கொட்ட முயன்ற யாழ் நகரின் மத்தியில் உள்ள பிரபல விடுதி ஒன்றின் உழவு இயந்திரம் மாநகர காவல் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ் நகரின் புறநகர்ப் புறத்தில் உள்ள ஒரு பிரபல விடுதியின் உணவுக் கழிவுகள் இறைச்சிக் கழிவுகளை உழவு இயந்திரத்தில் ஏற்றி காக்கைதீவில் கொட்ட முயன்றவேளையில் இவ்வாறு மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. காக்கை தீவுப்பகுதியில் கழிவுகளை கொட்டுவது தடை செய்யப்பட்டுள்ளபோதிலும் சில தனியார் இரவுவேளைகளில் திருட்டுத்தனமாக கழிவுகளை கொண்டுவது அவதானிக்கப்பட்டது.

இவ்வாறு கழிவுகளைக் கொட்டுவதனால் ஏற்படும் அசௌகரியம் தொடர்பில் பல தடவை சுட்டிக்காட்டியதனையடுத்தே மேற்படி நடவடிக்கை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாநகரசபையினால் அகற்றப்படும் கழிவுகள் தரம் பிரத்து அகற்றுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறும் வேளையில் தனியார் கொட்டும் கழிவுகள் தொடர்பிலும் மாநகரசபையுடன் முரண்படுவதனையடுத்தே இவ்வாறான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன் அடிப்படையில் 9ம் திகதி இரவு 11 மணியளவில் மாநகர காவல் உத்தியோகத்தர் வழங்கிய தகவலின் பிரகாரம் யாழ்ப்பாண காவல்துறையினரால் உழவு இயந்திரமும் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சாரதிமீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts