உத்தேச அரசியல் யாப்பில் 13ஆவது திருத்தச் சட்டத்தை ஒத்த வகையில், அதிகாரங்கள் பகிரப்படுகின்ற அதேவேளை, அதில் காணப்படுகின்ற பொதுப்பட்டியல் நீக்கப்படுவதுடன் வடக்கு – கிழக்கு இணைப்பும், முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை பெறும்வரை சாத்தியமாகாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பிருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..
தற்போது, சமஷ்டியா – ஒற்றையாட்சியா என்பது நாடளாவிய ரீதியில் பல்வேறு வாதப் பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ள நிலையில், புதிய அரசியலமைப்பானது குறித்த வார்த்தைப் பிரயோகங்கள் எதனையும் கொண்டிருக்காது எனவும், பகிரப்படுகின்ற அதிகாரங்களை மீளப் பறித்தெடுக்கமுடியாத வகையிலான சட்ட ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டு, எந்தவொரு சமூகத்தையும் பாதிக்காத முழுமையான அதிகாரப் பகிர்வாக அமையும் வகையிலேயே உருவாக்கப்படுகின்றதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையில் மாற்றங்கள் வருவதால், ஆளுநருக்கு தற்போது காண்ப்படுகின்ற அதிகாரங்களையும் புதிய அரசியலமைப்பு மட்டுப்படுத்தும் என்று நாடாளும்னற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் அது தொடர்பான பல்வேறு முக்கிய தகவல்களை கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறித்த நேர்காணலில் வெளிப்படுத்தியுள்ளார்.
குறித்த நேர்காணலின் முழுமையான வடிவம் எதிர்வரும் சனிக்கிழமை தைப்பொங்கல் தினத்தன்று ஆதவன் தொலைக்காட்சியில் பிரித்தானிய நேரம் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகும்.