முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை வழக்கில் சிங்கள மொழி பேசும் ஜுரிகைள் சபையினால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேன்முறையீடு செய்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் இந்த மேன்முறையீட்டு மனுவை இன்றைய தினம் தாக்கல் செய்தார்.