இந்திய பாத யாத்திரிகர்கள் யாழ் வருகை

இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்திய பாத யாத்திரிகர்கள் நேற்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

குறித்த யாத்திரிகர்கள் டிசம்பர் மாதம் 17ம் திகதி மதுரையிலிருந்து இலங்கைக்கான பயணத்தை ஆரம்பித்திருந்தனர்.

மாத்தறை விஷ்ணு ஆலயத்தில் இருந்து ஆரம்பித்த யாத்திரை நேற்றைய தினம் காங்கேசன்துறையில் நிறைவடைந்தது.

உலக சமாதானத்தையும், இனங்களுக்குகிடையிலான நல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் வகையில் 87 நாட்களை கொண்ட குறித்த நடை பயணத்தை மேற்கொண்ட யாத்திரிகர்கள் நேற்றயதினம் காலை 10 மணியளவில் இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகரை யாழ்ப்பாணத்திலுள்ள அவரது காரியாலயத்தில் சந்தித்தனர்.

இதுதொடர்பாக யாழ்ப்பாண இந்திய உதவித் துணைத் தூதுவர் அ.நடராஐன் கருத்து தெரிவிக்கையில், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் என்பது ஒரு புரிந்துணர்வினை ஏற்படுத்தும் அந்த வகையில் இலங்கை, இந்திய இரு நாடுகளின் நட்பு ரீதியான தன்மை ஒரு நல்லிணக்க தன்மை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் அது காலத்தின் முக்கியமானவை என்று அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக தற்போதைய யாழ்ப்பாண மாவட்டத்தின் நிலைமைகளின் சமய, கலை, கலாசார, இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வுகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் இதில் கலந்துரையாடப்பட்டன.

சந்திப்பின் போது இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, யாத்திரிகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினர்.

குறித்த யாத்திரிகர்கள் இந்தியாவின் மும்பை, குஜராத், மகாராஸ்ரா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் இந்தியாவில் இருந்து வருகை தந்த சமாதான குழுவினர்கள் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட சமாதான மக்கள் பேரவையின் அமைப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts