பருத்தித்துறையிலிருந்து கட்டைக்காட்டுக்கு செல்லும் இறுதி பஸ் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறைசாலையின் முகாமையாளர் கே.கந்தசாமி தெரிவித்தார்.
பின்தங்கிய கிராமமான கட்டைக்காடு கிராமத்துக்கு இதுவரை இறுதி பஸ் மாலை 4 மணிக்கு புறப்பட்டது.
இதனால், அக்கிராமத்திலிருந்து வெளியிடங்களுக்குச் செல்லும் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
இதனையடுத்து, பருத்தித்துறையிலிருந்து கட்டைக்காட்டுக்கு செல்லும் இறுதி பஸ் மாலை 6 மணிக்கு நேற்று முதல் சேவையை ஆரம்பித்துள்ளது.