நாடளாவிய ரீதியில் இன்று முதல், குளிர் வானிலை அதிகரிக்கும் என்று, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
காலைவேளையில் அல்லது இரவு வேளைகளிலேயே குளிரான நிலைமை காணப்படும் என்றும், அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வு கூறப்பட்டது போல, நிகழுமாயின், கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய ஆகிய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்ட மாவட்டத்திலும் மழையை எதிர்ப்பார்க்கலாம்” என்றும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
“மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் ஆங்காங்கே பிற்பகல் வேளைகளில் மழையையோ அல்லது இடியுடன் கூடிய மழையையோ எதிர்ப்பார்க்கலாம்” என்றும் வளிமண்டளவியல் திணைக்களம் கூறியுள்ளது.