பயணிகளின் தேவையை பூர்த்தி செய்தியுமளவுக்கு ரயில் சேவைகள் நடத்தப்படுவதாக ரயில் கட்டுப்பாட்டு அதிகாரி விஜயசமரசிங்க தெரிவித்தார்.
இதே வேளை பயணிகளின் நலன்கருதி கூடுதலான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்தார்.
பயணிகளின் நலன்கருதி நேற்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான நான்காயிரத்து 100 பஸ்கள் குறுந்தூர மற்றும் நெடுந்தூர சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அனைத்து நிலையங்களிலும் பொதுவான ரெயில் மற்றும் நெடுந்தூர சேவைகள் இடம்பெற்றதாக ரயில் கட்டுப்பாட்டு அதிகாரி விஜயசமரசிங்க குறிப்பிட்டார். வழமையான ரெயில்களுக்கு மேலதிகமாக குறுந்தூர ரெயில சேவைகளும் கால அட்டவணையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாக திரு. சமரசிங்க குறிப்பிட்டார்.
நெடுந்தூர புகையிரத பயணங்களுக்கு மேலதிக ரயில் சேவைகளும் கால அட்டவணையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. நேற்று பகல் வேளையிலிருந்து அனைத்து ரயில் நிலையங்களிலும் பொதுவான நேர அட்டவணையின்படி ரயில் சேவைகள் இடம்பெற்று வருவதாக திரு விஜயசமரசிங்க மேலும் தெரிவித்தார்.
பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில்மேலதிக ரெயில் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் சேவைகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ் மாவட்டத்திலும் தனியார் சேவைகள் வழமைபோல்
இது ஒருபுறமிருக்க நாடளாவிய ரீதியில் தனியார் பேருந்துகள் நேற்று சேவை புறக்கணிப்பை மேற்கொண்ட போதிலும் வடமாகாணத்தில் தனியார் பேருந்து சேவைகள் எவ்வித தடையுமின்றி வழமைபோல்
இடம்பெறது.
குறித்த பணிப்பகிஸ்கரிப்பிற்கு வடமாகாண தனியார் பேருந்து சங்கத்தினர் ஆதரவு வழங்க வேண்டாம் என வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் விடுத்து வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட வடமாகாண தனியார் பேருந்து சங்கத்தினர் அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் விடுத்த குறித்த சேவைப்புறக்கணிப்பிற்கான அழைப்பை புறக்கணித்து சேவையில் ஈடுபட்டுள்ளனர்
உள்ளுர் பயணத்திற்கான மினிபஸ்கள் முழுமையாக இயக்கப்பட்டுவருவதுடன்வ வுனியா கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களிற்கான சேவையும் வழமைபோல் இடம்பெற்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.