இலங்கை இராணுவத்தின் மிதிவெடி அகற்றும் குழுவுக்கு சர்வதேச விருது

இலங்கை இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் குழு அமெரிக்காவின் மார்ஷல் லெகஸி நிறுவனத்தின் சர்வதேச விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவைச் சேர்ந்த 7வது கள பொறியியல் படையின் கண்ணிவெடி அகற்றும் மோப்பநாயான “அல்வின்” மற்றும் அதனை கையாளும் லான்ஸ் கோப்ரல் ஜீ. என்.டபிள்யூ.எம். நவரத்ன ஆகியோரின் பெயர்களே இந்த விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி அமெரிக்காவின் வாஷிங்டனில் இடம்பெறவுள்ள நிகழ்வின் போதே 2016ஆம் ஆண்டுக்கான குழுவினர் (ட்ரீம் ஒப்த இயர் – 2016) என்ற சர்வதேச விருது வழங்கப்படவுள்ளது.

லான்ஸ் கோப்ரல் ஜீ. என். டபிள்யூ எம். நவரத்ன வடக்கு மற்றும் கிழக்கில் 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சுமார் ஐந்து வருடங்களாக கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார்

Related Posts