தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற முன்னாள் போராளிகளின் மர்ம சாவு, வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஊடகமான இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் இதனைத் தெரிவித்துள்ளது. இதுவரையில் 105 முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் மரணித்துள்ளதாக கூறப்படுகிறது.
புனர்வாழ்வளிப்பு காலத்தில்அவர்களுக்கு ஏதேனும் விஷ ஊசிகள் செலுத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
அண்மையில் ஒட்டுச்சுட்டானில் இடம்பெற்ற மறுசீரமைப்பு குழு கூட்டத்தில் வைத்து, முன்னாள் போராளி ஒருவர் தமக்கு இராணுவத்தால் செலுத்தப்பட்ட மருந்தை அடுத்தே தாம் ஊனமுற்றதாக கூறி இருந்தார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த காலத்தில் பாரிய சுமைகளை சுதந்தபடி ஓட முடிந்ததாகவும், தற்போது 10 கிலோவை தூக்குவதற்கே முடியாமல் இருப்பதாகவும் அவர் கூறி இருந்தார்.
இதனை அடுத்தே இந்த குற்றச்சட்டு பெரிதாகிஇருக்கிறது. மேலும் பல முன்னாள் போராளிகளும் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.
இந்த நிலையில் அனைத்து முன்னாள் போராளிகளுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் கூறி இருந்தார்.
இதன்படி மருத்துவ பரிசோதனை நடத்த தயாராக இருப்பதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.