Ad Widget

கூட்டமைப்பினரை இன்று சந்திக்கிறார் கனேடிய அமைச்சர்!!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டேபன் டையோன், இன்று (வியாழக்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

Stéphane-Dion-canada

இதன்போது, இலங்கை அரசாங்கத்தின பொறுப்புக்கூறல் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து கேட்டறியவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும் மொழிகள் அமைச்சர் மனோ கணேசனையும் கனேடிய அமைச்சர் இன்று சந்திக்கவுள்ளார். அமைச்சு அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பின்போது, தேசிய மொழிகள் சமத்துவ மேம்படுத்தல் கருத்திட்டத்திற்காக, கனடா அரசாங்கத்தின் மூலம் வழங்கப்படவுள்ள 11.2 மில்லியன் டொலர் உதவி தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது.

அத்தோடு, ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோரையும் இன்றைய தினம் கனேடிய அமைச்சர் சந்திக்கவுள்ளார். நாளைய தினம் யாழ்ப்பாணம் வரவுள்ள கனேடிய அமைச்சர், வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதோடு, கனடாவின் நிதியுதவியில் வடக்கில் முன்னெடுக்கப்படும் பல்வேறு திட்டங்களையும் பார்வையிடவுள்ளார்.

சுமார் 13 வருடங்களுக்குப் பின்னர் கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts