காணாமல்போனோரின் விபரங்களை வெளியிடுமாறு செஞ்சிலுவைச் சங்கம் கோரிக்கை!

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது காணாமல் போனோர்கள் எனக் கூறப்படும் 16,000 பேரின் நிலமை என்ன? எனவும், அவர்களின் பெயர் விபரங்கள் விரைவில் வெளியிடப்படவேண்டுமெனவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் 14 மாதங்களாக மேற்கொண்ட ஆய்வின் பின்னரே செஞ்சிலுவைச் சங்கம் குறித்த அறிக்கையை கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் வெளியிட்டுள்ளது.

34 பக்கங்களைக் கொண்ட குறித்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

இறுதிக்கட்ட யுத்தம் நிறைவடைந்து பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அந்த யுத்தத்தில் காணாமல் போனவர்கள் 16,000 பேர் குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

அவர்களின் நிலை என்னவானது? அவர்கள் இப்போது எங்கிருக்கின்றார்கள்? அவர்கள் சந்திக்கும் பொருளாதார, சட்ட, நிர்வாக பிரச்னைகள் உள்ளிட்ட விவரங்களை அவர்களின் குடும்பத்தினர் அறிய விரும்புகின்றனர்.

எனவே காணாமல் போனோரின் நிலை குறித்த முழு விபரங்களையும் இலங்கை அரசாங்கம் வெளியிடவேண்டுமென அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், உலகிலேயே அதிகமான காணாமல்போனோர் நாடுகளைக் கொண்ட பட்டியலில் இலங்கையும் அடங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts