எரிபொருள் விநியோக குழாயில் வெடிப்பு; எரிபொருள் இறக்கும் நடவடிக்கை நிறுத்தம்

கொழும்பு துறைமுகத்தின் எரிபொருள் விநியோக குழாயில் மீண்டும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரானில் இருந்து கொண்டுவரப்பட்ட 90 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருள் நேற்று இறக்கப்படும் போது குறித்த குழாய் வெடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

இதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரும் குறித்த குழாயில் வெடிப்பு ஏற்பட்டிருந்தது.

லங்கா மசகு எண்ணெய் தேசிய ஊழியர் சங்கத்தின் செயலாளர் ஆனந்த பாலிதவிடம் இது தொடர்பில் வினவியதற்கு, தரக்குறைவான எண்ணெய் குழாய் கொண்டு வரப்பட்டமையால் இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

எரிபொருள் இறக்கும் நடவடிக்கைகள் தாமதமானால், கப்பலுக்காக நாள் ஒன்றுக்கு பாரியளவில் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஆனந்த பாலித கூறினார்.

Related Posts