கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து 5 வயதுச் சிறுவனின் சடலம், ஞாயிற்றுக்கிழமை (17) மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 15ஆம் திகதி காணாமற்போன காந்தரூபன் தர்சன் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிணற்றில் சிறுவனின் சடலம் இருப்பதாக, சனிக்கிழமை (16) இரவு பொலிஸாருக்கு தெரியவந்ததையடுத்தே, சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்புடைய விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.