போர்க்குற்ற விசாரணையிலிருந்து இலங்கை தப்பிக்க முடியாது! ஐ.நா.

இலங்கையில் போரின் இறுதித் தருணங்களில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக் கூறுவது தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் குறித்து இலங்கை அரசு உறுதியாக இருக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

stipan-UN

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ – மூனின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் நியூயோர்க்கில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசு அளித்த வாக்குறுதிகள், சர்வதேச சமூகத்திற்கும் இடையில் ஏற்பட்ட உடன்படிக்கைகள் போன்றவை எனத் தெரிவித்துள்ள அவர், இலங்கை அந்த வாக்குறுதிகளை உறுதியாக பின்பற்றவேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

“இலங்கை அரசுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இடையிலான விவகாரங்கள் பல உள்ளன. பொறுப்புக்கூறுவது தொடர்பான உடன்பாடுகள் உள்ளன. இவற்றை இலங்கை அரசு பின்பற்றும்” எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Related Posts