அமெரிக்காவின் மனித உரிமைகள் உதவி செயலாளர் இலங்கை வந்தடைந்தார்

அமெரிக்காவின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவி செயலாளர் டொம் மலினொவ்ஸ்கி இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

tom

இவர் இன்று (12) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கையின் இணை அனுசரணையுடன் மனித உரிமைகள் பிரேரணையில் முன்வைக்கப்பட்ட விடயங்களின் முன்னேற்றம் தொடர்பில் இதன்போது அவர் ஆராயவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவிக்கின்றது.

அத்துடன், நீதி மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரைாயடல்களில் அவர் ஈடுபடவுள்ளதுடன் அவற்றுக்கு அமெரிக்காவின் ஒத்துழைப்புக்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரைாயடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts