மஹிந்தவும் டக்ளஸுமே படுகொலைகளுக்குக் காரணம்! அமைச்சர் விஜயகலா

எனது கணவர் மகேஸ்வரன் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமைக்கும், முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்து 50ஆயிரம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கும் கடந்த அரசும் (மஹிந்த அரசு), ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுமே காரணம் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“கடந்த அரசு செங்கோலை வைத்து கொடுங்கோல் ஆட்சி புரிந்தது. எனது கணவர் தமிழீழ விடுதலைப்புலிகளால் படுகொலை செய்யப்பட்டார் என்று அண்மையில் வதந்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்தக் கருத்து முற்றிலும் பொய்யானது.

2007ஆம் ஆண்டு நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தின்போது, தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எனது கணவர் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டிப் பேசினார்.

இதனால், குறித்த நாளன்று இரவே அவருக்கு வழங்கப்பட்டிருந்த 15 மெய்க்காவலர்களும் உடனடியாக நீக்கப்பட்டனர். விடுதலைப்புலிகள் மகேஸ்வரனை கொலை செய்திருப்பார்கள் என்றால், அரசு அவரது பாதுகாப்பை தளர்த்தியிருக்கத் தேவையில்லை” – என்று தெரிவித்துள்ளார்.

Related Posts