யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ்ஸின் மீது வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் நேற்று இரவு கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபையின் கொழும்பு சாலைக்கு சொந்தமான பஸ்ஸின் மீதே நேற்று இரவு 9 மணியளவில் கல்வீசப்பட்டுள்ளது.
தாண்டிக்குளம் இராணுவ உணவகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இச்சம்பவத்தில் பஸ்ஸின் சாரதியான அஜித்குமார என்பவர் தலையில் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- Sunday
- July 13th, 2025