வடக்குக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்கா இன்று வியாழக்கிழமை யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகத்தை சந்தித்தார்.
ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அநுரகுமாரவுடன் மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட இணைப்பாளர் சந்திரசேகரனும் கூட இருந்தார்.
இதேவேளை – மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட தலைமையத்தில் நடைபெறும் ஊடகவியலாளர் மாநாட்டிலும் அநுரகுமார கலந்துகொள்கின்றார்.
இந்த மாநாட்டை முடித்துக்கொண்டு கிளிநொச்சிக்கு செல்லும் அவர் அங்கு நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்வார். அத்துடன் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களுக்குச் செல்லவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.