பஸ் மோதியதில் 5 மாடுகள் பலியாகியுள்ளதுடன் 3 மாடுகள் படுகாயமடைந்த சம்பவம் திங்கட்கிழமை (13) மாலை யாழ்ப்பாணம், சிறுப்பிட்டி சந்தியில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸே, பாதையை கடக்க முயன்ற மாடுகளின் மீது மோதிவிட்டு சென்றுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.