ஆளுங்கட்சிக்கு தாவவில்லை – த.தே.கூ உறுப்பினர்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சிக்குட்பட்ட வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர்கள் இருவர், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு தாவியுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ள போதிலும், தாங்கள் அவ்வாறு செயற்படவில்லை என நகரசபை உறுப்பினர்களான ஜெ.ஜெயராஜா, எம்.மயூரன் ஆகிய இருவரும் விளக்கமளித்தனர்.

நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தவிர வேறு எங்கும் செல்லமாட்டோம் எனக் கூறிய ஜெ.ஜெயராஜா, ‘எனது தனிப்பட்ட தேவை காரணமாக நான் கொழும்பு சென்றிருந்த தருணத்தில், நான் கட்சி மாறுவதற்காக கொழும்பு சென்றுள்ளேன் என செய்திகள் பரவியுள்ளன’ என்றார்.

‘இருந்தும் நான் கட்சி மாறவில்லை. பொய்ப் பரப்புரைகளில் எவரும் ஈடுபடவேண்டும். நாங்கள் எப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களாகவே இருப்போம்’ எனக் கூறினார்.

Related Posts