வடமாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரனின் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட்டுகோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.
பண்ணாகத்தில் அமைந்துள்ள அவரது வீட்டின் மீது செவ்வாய்க்கிழமை (06) அதிகாலை 1.30 மணியளவில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பின்னர், வெளியில் வந்து பார்த்த போது உயரமான கோர்ட் அணிந்த ஒருவர் வீட்டுக்கு அருகிலிருந்து ஓடியதாக அனந்தி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.