Ad Widget

கடமை நேரத்தில் கணனியில் பேஸ்புக் கேம். கச்சேரியில் சேவை பெறச் சென்றவர்கள் விசனம்!

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் குறித்த சில பிரிவுகளில் பணியாற்றும் அரச ஊழியர்கள் சிலர் உரிய நேரத்தில் சேவைகளை வழங்காமல் மேலதிகாரிகளின் கண்களில் மண்ணைத்தூவி விடுவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம் சுமத்தியுள்ளனர்.

game-kachcherey-girl-facebook

பண்டத்தரிப்புப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை வாழ்வெழுச்சித் திட்டம் அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அரச அதிபர் உட்பட திணைக்கள அதிகாரிகள் சென்றிருந்தனர்.

இந்நிலையில் பலர் கடமை நேரத்தில் தமது அலுவலகங்களில் இல்லாமல் வெளியில் சென்று விட்டமை குறித்து சேவை பெறச் சென்ற பொதுமக்களால் முறையிடப்பட்டுள்ளது.

அத்தோடு மாவட்டச் செயலகத்தின் கீழ் மாடியில் ஒருவர் கடமை நேரத்தில் கணினியில் நீண்டநேரமாக பேஸ்புக்கில் கேம் விளையாடிக்கொண்டிந்ததை அவதானித்தவர்கள் அதனை புகைப்படத்துடன் பத்திரிகை ஒன்றுக்கு சமர்ப்பித்துள்ளனர்.

இதேவேளை வாழ்வின் எழுச்சி நிகழ்வில் பங்குகொண்டு விட்டு அரச அதிபர் உள்ளிட்ட திணைக்கள உயர் அதிகாரிகள் வருகை தந்தவேளை அங்கிருந்த ஊழியர்கள் தமக்குரிய இடங்களுக்குத் திரும்பி வேலையில் பொறுப்புடன் இருப்பதாக காட்டிக் கொண்டதாகவும் சேவை பெறச் சென்றவர்கள் தரப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

Related Posts