தொழில் சட்டத்தினை உடனடியாக அமுல்படுத்த உத்தரவு

யாழ். மாவட்டத்திலுள்ள தொழில் நிறுவனங்களில் தொழில் சட்டத்தினை உடனடியாக அமுல்படுத்துமாறு வடமாகாண பிரதித் தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.

தொழில் நிறுவனங்களின் கூட்டுறவு மற்றும் சமூக கட்டுப்பாடு தொடர்பான கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

தொழில் நிறுவனங்களில் ஊழியர் சேமலாப நிதி கடைக்காரியாலய சட்டம் மற்றும் பணிக்கொடை சட்டம், சம்பள சபைச் சட்டம் போன்றவற்றினை நேற்று வெள்ளிக்கிழமை முதல் அமுல்படுத்துமாறும் வடமாகாண பிரதித் தொழில் ஆணையாளர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

தொழில் நிறுவனங்களின் அமைதி மற்றும் சமதொழில் பேணுதல் என்பது பற்றியும் இதன்போது தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில், யாழ். மாவட்ட தொழில் ஆணையாளர் நீலலோஜினி கேதீஸ்வரன், தொழில் திணைக்கள அலுவலர்கள், தொழில் நிறுவன உரிமையாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts