மன்றுக்கு வருகின்றது குருநகர் யுவதியின் வழக்கு

jeromey-kurunagarகுருநகர்ப்பகுதியில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி ஜெரோமி கொன்சலிற்றா மரணம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த யுவதியின் மரணம் தொடர்பில் சந்தேகிக்கப்படுவதாக அவரது பெற்றோரினால் தெரிவிக்கப்பட்ட 2பாதிரியார்களும் இன்றுமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

அதன்படி கடந்த 13ஆம் திகதி வீட்டில் இருந்து காணாமல் போன குறித்த யுவதி மறுநாள் வருடப்பிறப்பு அன்று பெரியகோயிலுக்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொலிஸார் தெரிவித்திருந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இந்தநிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த யுவதியின் பெற்றோரிடம் இருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அதில் இரண்டு பாதிரிமார்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இதன்படி குற்றஞ்சாட்டப்பட்ட பாதிரிமார்களிடமும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். எனினும் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.

பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்திருந்தனர். அதன்படி வழக்கு இன்று மன்றில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Related Posts