ஊடகவியலாளர் மீது வடமராட்சியில் தாக்குதல்

attack-attackயாழ். சுயாதீன ஊடகவியலாளர் நேற்று இரவு 10 மணியளவில் இனம் தெரியாத நபர்களினால் வடமராட்சியில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.

வடமராட்சி மாலுசந்தி பகுதியை சேர்ந்த 29 வயதுடைய சிவஞானம் செல்வதீபன் என்ற ஊடகவியலாளரே தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் தனது வீடு நோக்கி சென்று கொண்டு இருக்கையில் அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்களில் சென்ற இனந்தெரியாத நபர்கள் கம்பியால் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

படுகாயமடைந்த ஊடவியலாளர் சிகிச்சைக்காக மந்திகை ஆதரா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Posts