யாழ். மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் பயன்பாட்டுக்கென சமிக்ஞை வாகனமொன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாநகர சபையிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
யாழ். மாநகர சபை வளாகத்தில் மேற்படி நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.
உள்ளுராட்சி அமைச்சினால் யாழ். மாநகர சபையின் பயன்பாட்டுக்கென குறித்த வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
8 மில்லியன் ரூபா பெறுமதியான இவ் வாகனம் குறித்த ஒருபகுதியில் தீவிபத்து ஏற்படும் பட்சத்தில் தீயணைப்பு பிரிவின் வாகனத்தை வீதியில் கொண்டு செல்லும் போது ஏற்படக் கூடிய அசௌகரியங்களுக்கு தீர்வு காணும் முகமாக இப்புதிய வாகனம் சமிக்ஞை ஒளியை எழுப்பியவாறு முன்னே செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்போது யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, யாழ்.மாநகர ஆணையாளர் பிரணவநாதன், அமைச்சரின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.வி குகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.