Ad Widget

வலி.வடக்கு பிரதேச சபையின் தீர்மானத்தினை எதிர்த்து கண்டனப் போராட்டம்

வலி.வடக்கு பிரதேச சபையில் தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரிக்கு எதிராக சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பிரிவினர் தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பணிமனைக்கு முன்னால் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

tellippalai

தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பணிமனையின் சுகாதாரத் தொண்டர்கள், அலுவலக ஊழியர்கள், சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர், மற்றும் தாய்மார் சங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘நல்ல உள்ளம் கொண்டவரை காயப்படுத்த வேண்டாம், எமது வைத்தியதிகாரியை குறை கூறாதே, சிறுவர்களுக்காக தனது சொந்த பணத்தை செலவு செய்தவர், ‘பத்திரிகையாளர்களே உண்மையை ஆராய்ந்து எழுதுங்கள், ஏழைகளின் தோழர் மீது கை வையாதே’ போன்ற சுலோகங்களைத் கைகளில் தாங்கியவாறு ஈடுபட்டனர்.

தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி வலி.வடக்கு பிரதேசத்தில் சிறப்பாக சேவையாற்றவில்லையென்றும் இதனால் அவரை எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் இடமாற்றம் செய்யுமாறும் கடந்த திங்கட்கிழமை (31) வலி.வடக்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

மருத்துவத்துறைக்கு அப்பால் கல்வி, கலை, கலாசாரம், ஆன்மீகம் போன்ற பல்வேறு துறைகளில் சமூக சேவையாற்றி வருகின்ற தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி ப.நந்தகுமார் வலி.வடக்கு பிரதேசத்தில் சிறந்த சேவையாற்றி வருகின்றார். இந்த நிலையில் இவருக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் எனக் கோரிய இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தனிடம் கடிதமொன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி

பிரதேச சபையின் தீர்மானத்திற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கடும் கண்டனம்

Related Posts