ஆவா குழுவின் தலைவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

jail-arrest-crimeயாழ். மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட ஆவா குழுவின் தலைவரை மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் உத்தரவிட்டார்.

யாழ். மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ஆவா (அதன் தலைவர் ஆவா வினோதன் உட்பட) குழுவைச் சேர்ந்த 13 பேர் ஜனவரி மாதம் 6ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

யாழ்ப்பாணம் மற்றும் மல்லாகம் ஆகிய நீதிமன்றங்களினால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட இவர்கள், பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் தலைவர் மட்டும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கு நேற்றயதினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தினால் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கைக்குண்டுகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆவாக் குறுப்பின் தலைவரை தொடர் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

Related Posts