வடமாகாண சபையின் 4 அமைச்சுக்களுக்கும், முதலமைச்சருக்கும் வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாணக் கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்றபோதே தவிசாளர் இவ்வாறு தெரிவித்தார்.
வடமாகாண அமைச்சுக்களின் செயற்பாடுகளை சிறப்பாக மேற்கொள்ளும் பொருட்டும் அமைச்சுக்களின் செயற்பாடுகளுக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டும் இந்த ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனத் தவிசாளர் தெரிவித்தார்.
அந்த வகையில், வடமாகாணத்தில் கல்வி, சுகாதாரம், மீன்பிடி, சுகாதாரம் மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கே இந்த ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஆலோசகர்களாக இருப்பதுடன் குறிப்பாக அங்கஜன் இராமநாதன், தர்மபால செனவரத்தின ஆகியோர் முதலமைச்சரின் ஆலோசகர்களாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது