பருத்தித்துறை நகரசபையின் கீழுள்ள பொதுச் சந்தை மரக்கறி வியாபார நடவடிக்கைகளை வேறிடத்திற்கு மாற்றுவது தொடர்பில் பாரம்பறிய கைத்தொழில் மற்றும் சிறுதொhழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா Nநேற்று நேரில் சென்று ஆராய்ந்துள்ளார்.
இதன்போது, மரக்கறி வியாபாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர், வியாபாரிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டார்.
இதனிடையே, முன்னர் மரக்கறி சந்தை நடைபெற்று வந்த இடத்தைப் பார்வையிட்டதுடன், அங்கு மரக்கறி வியாபாரத்தை மேற்கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்தினார்.
இதன்போது, ஈ.பி.டி.பி.யின் வடமராட்சி சிறிரங்கேஸ்வரன், ஈ.பி.டி.பி.யின் கரவெட்டிப் பிரதேச இணைப்பாளர் செந்தில்நாதன் ஆகியோர் உடனிருந்தனர்.