கார்த்திகைப் பூவை மறைக்குமாறு பொலிஸார் உத்தரவு!!

முல்லைத்தீவு – முள்ளியவளைப் பகுதியில் மாவீரர்களின் குடும்பத்தினரைக் கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றின் ஏற்பாட்டாளர்களிடம் இலங்கைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், அவர்களின் தனிப்பட்ட விபரங்களையும் பதிவு செய்துள்ளனர்.

நிகழ்வு நடைபெறும் மண்டபத்திற்கு வெளியே காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகையில் பொறிக்கப்பட்டிருந்த, தமிழர்களின் தேசிய மலரான கார்த்திகைப் பூவின் உருவத்தை மறைக்குமாறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், நிகழ்விற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் பொலிஸார் அவ்விடத்திலேயே தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் எவ்வித இடையூறுகளுமின்றி இந்த நிகழ்வு நடாத்தப்பட்டு வருவதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts