உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதுடன், தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,526 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இதற்கமைய, உலகச் சந்தையில் தங்கத்தின் விலை 3,500 டொலர் எல்லையை அண்மித்துள்ளது.
இந்த நிலைமையுடன் இலங்கையிலும் தங்கத்தின் விலை இன்று (20) 7,000 ரூபாயினால் குறைவடைந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு செட்டியார்த் தெருவின் இன்று (20) முற்பகல் 10.00 மணிக்குப் வௌியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில்,
24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 345,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 317,400 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 352,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 323,800 ரூபாயாகவும் காணப்பட்டது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் விலை வீழ்ச்சியானது தங்க ஆபரண கொள்வனவில் ஈடுபடுவோருக்கு பாரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.