அரச சேவையில் உயர்பதவி வெற்றிடங்கள்: விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

இலங்கை கல்வி நிர்வாக சேவை, இலங்கை நிர்வாக சேவை, இலங்கை விவசாய சேவை, இலங்கை திட்டமிடல் சேவை, இலங்கை கணக்காளர் சேவை, இலங்கை பொறியியலாளர் சேவை, இலங்கை கட்டடக் கலைஞர் சேவை மற்றும் இலங்கை விஞ்ஞான சேவை ஆகிய நாடளாவிய சேவைகளின் தரம் III பதவிகளுக்கு திறந்த முறையில் ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்குத் தகைமையுடைய இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இந்தப் பதவி வெற்றிட அறிவித்தல் 13.11.2026 ஆம் திகதிய 2515 – 2026 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்குத் தகுதியும், ஆர்வமும் உடையவர்கள் இலங்கைப் பரீட்சைத் திணைக்கள இணையத்தளத்தின் “Our Services” இன் கீழ் காணப்படும் “Application for the Common Recruitment Examination” இல் விபரங்களைப் பெற்றுத் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பங்கள் நிகழ்நிலை ஊடாக எதிர்வரும் டிசெம்பர் மாதம் 11 ஆம் திகதி இரவு 09.00 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

விண்ணப்பங்களை நிகழ்நிலை ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க முடியும்.

Related Posts