யாழில் திடீர் பணக்காரர்களானவர்கள் மீது நடவடிக்கை: பொலிஸார் தீவிர விசாரணை!

யாழ்ப்பாணத்தில் குறுகிய காலத்தில் திடீரென பெருமளவு சொத்துக்களைச் சேர்த்து பணக்காரர்களாக ஆகியுள்ளார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மேலும் பலரிடம் யாழ்ப்பாண குற்றத் தடுப்பு பொலிஸார் தீவிர வாக்குமூலங்களைப் பெற்று வருகின்றனர்.

ஏற்கனவே குறுகிய காலத்தில் திடீர் பணக்காரர்களாக மாறிய சுமார் 18 பேர் பொலிஸ் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இந்தச் சட்டவிரோத சொத்துக் குவிப்பு தொடர்பில் மேலும் சிலரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

குறுகிய காலத்தில் அதிகளவில் சொத்துக்கள் சேர்த்தல், போதைப்பொருள் கடத்தல், அதிக வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குதல் (மீட்டர் வட்டி) மற்றும் கப்பம் பெறுதல் போன்ற சட்டவிரோத செயல்கள் மூலம் இவர்கள் திடீர் பணக்காரர்களாக ஆகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினர் இணைந்து இந்த விசேட கூட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts