மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) நாராஹேன்பிட்டி தலைமை அலுவலகத்தில் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நேற்று முன்தினம் (02) முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, திணைக்களத்தினால் வழங்கப்படும் அனைத்து ஒருநாள் சேவைகளையும் முன் பதிவுகளை (Appointments) மேற்கொள்வதன் ஊடாக மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு பின்வரும் இரண்டு வழிமுறைகளில் ஒன்றைப் பயன்படுத்தி முன் பதிவுகளை மேற்கொள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது:

தொலைபேசி அழைப்பு மூலமாக தமது பிரதேச தொலைபேசி குறியீட்டு இலக்கத்தை முன்னால் சேர்த்து 117 116 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் நேரத்தை பதிவு செய்ய முடியும்.
(உதாரணம்: 011 2 117 116)

ஒன்லைன் (Online) முறைமை மூலமாக https://dmtappointments.dmt.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குப் பிரவேசித்து நேரத்தைப் பதிவு செய்ய முடியும்.

வாகனங்களை புதிதாகப் பதிவு செய்தல், வாகன உரிமையை மாற்றுதல், சாரதி அனுமதிப்பத்திரம் விநியோகித்தல் மற்றும் தொழில்நுட்பப் பிரச்சினைகளைத் தீர்த்தல் உள்ளடங்கலாக ஏனைய அனைத்து ஒருநாள் சேவைகளையும் பெற்றுக்கொள்வதற்கு திணைக்களத்திற்கு வருகை தருவதற்கு முன்னர் மேலே குறிப்பிடப்பட்ட முறைமைகளில் ஒன்றில் நேரத்தைப் பதிவு செய்யுமாறு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Posts