இலங்கைப் பாடசாலை சதுரங்கச் சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட தேசிய ரீதியிலான சதுரங்கச் சுற்றுப்போட்டி அண்மையில் அனுராதபுரம் சுவர்ணபாலி மகளிர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் 6 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் போட்டியிட்ட யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் சிறீஷனாத் தீக்ஷிகன், 7 சுற்றுகளில் 5-இல் அபாரமாக விளையாடி மெரிட் (Merit) வெற்றியைப் பெற்றுள்ளார்.
இதன் மூலம் 2027-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தெரிவுப்போட்டியில் பங்கெடுப்பதற்கான தகுதியை அவர் பெற்றுள்ளார்.
குறித்த மாணவன் இதற்கு முன்னரும் பல சதுரங்கப் போட்டிகளில் தொடர்ச்சியாகப் பங்கெடுத்துச் சாதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.