நாட்டின் பல பகுதிகளில் மழை தீவிரமடையலாம்! வானிலையில் மாற்றம்!

இலங்கையை அண்மித்த பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு மேற்கு நோக்கிய திசையில் விலகிச் செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இதன் தாக்கம் இன்றைய தினமும் நாட்டில் நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், அநுராதபுரம் மற்றும் காலி மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts