தமிழ் சினிமாவில் மக்கள் கொண்டாடும் நாயகனாக முன்னணியில் இருந்து வந்தவர் நடிகர் விஜய்.

கடைசியாக இவரது நடிப்பில் ஜனநாயகன் ரிலீஸ் ஆனது, படம் வெளியாவதற்கு முன்பே பல பிரச்சனைகளை சந்தித்து தான் வெளியாகி இருந்தது.
தனது 69வது படத்துடன் நடிக்கப்போவதில்லை என முடிவு எடுத்தவர் அரசியலில் என்ட்ரி கொடுத்து அதில் ஜெயித்து இப்போது முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்துள்ளார்.
அவர் சினிமாவை விட்டு வெளியேறிய நேரத்தில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனர் அவதாரம் எடுத்து சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார்.
சிக்மா என்ற படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க எடுத்திருந்தார், ஆனால் படம் சரியான ரீச் பெறவில்லை.
இந்த சிக்மா பட புரொமோஷன் நிகழ்ச்சிகளில் எப்போது நடிக்க வருவீர்கள் என பலரும் ஜேசன் சஞ்சய்யிடம் கேட்டனர்.
அதற்கு அவர் சரியான வாய்ப்பு வந்தால் நடிக்கலாம் என கூறியிருந்தார்.இந்த நிலையில் அவரைப்பற்றி ஒரு சூப்பர் குட் நியூஸ் வந்துள்ளது.
அதாவது இயக்குனர் அவதாரம் எடுத்த ஜேசன் சஞ்சய் சென்னையை சேர்ந்த முன்னணி நகைக்கு Brand Ambassador ஆகியுள்ளாராம். நகை கடை விளம்பரம் கூட அண்மையில் ஜேசன் சஞ்சய் இடம்பெற படப்பிடிப்பு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.